Ummazo உம்மத்துக்கான Zone · மதுரை

🎓 Ummazo Seller Academy

Level 1 — அடிப்படைப் பயிற்சி · 14 சிறு பாடங்கள் · ஒவ்வொன்றும் 2 நிமிடம்

தமிழ் | English

உள்நுழை · இந்தப் பயிற்சி வணிகர்களுக்கானது. உங்கள் வணிக login-இல் நுழைந்தால் முன்னேற்றமும் badge-உம் கிடைக்கும்.

📋 பகுதி-1 · Part-1 — Profile முழுமை

1 📖 பாடம்: 1 — நல்ல கடைப் படம்
Lesson 1: Good Shop Photo

வாடிக்கையாளர் முதலில் பார்ப்பது உங்கள் கடைத் தோற்றத்தைத்தான்.

  • பகல் வெளிச்சத்தில், கடைக்கு எதிரே நின்று எடுங்கள்.
  • பெயர்ப் பலகை தெளிவாகத் தெரிய வேண்டும்.
  • Phone-ஐ horizontal ஆக (படுக்கை வசமாக) பிடித்து எடுங்கள்.
  • இரவில் அல்லது மங்கலான வெளிச்சத்தில் எடுத்த படம் வேண்டாம்.

✅ இன்றே செய்ய: கடையின் முன்புறம் ஒன்று, உள்ளே பொருட்கள் தெரியும்படி ஒன்று என 2 புதிய படங்கள் எடுத்து ஏற்றுங்கள்.

இப்போதே செய்ய: 📷 படங்களை மாற்ற

2 📖 பாடம்: 2 — வணிக விவரம் எழுதுவது
Lesson 2: Write Your Business Description

3 வரிகள் போதும்: என்ன விற்கிறீர்கள், எந்தப் பகுதியில், உங்கள் சிறப்பு என்ன.

❌ "எல்லா பொருட்களும் கிடைக்கும்."

✅ "அண்ணா நகரில் 15 வருட மளிகைக் கடை. அரிசி, பருப்பு மொத்த விலையில். ₹500-க்கு மேல் வீட்டு டெலிவரி."

✅ இன்றே செய்ய: உங்கள் விவரத்தை இந்த 3 வரி வடிவத்தில் மாற்றி எழுதுங்கள்.

இப்போதே செய்ய: ✏️ விவரத்தைத் திருத்த

3 📖 பாடம்: 3 — அடிப்படை விவரங்கள் சரியா?
Lesson 3: Check Your Basic Details

தவறான எண் அல்லது நேரம் இருந்தால், வந்த வாடிக்கையாளர் திரும்பிப் போவார். திரும்ப வரவும் மாட்டார்.

  • WhatsApp எண்ணும் call எண்ணும் சரியா?
  • திறக்கும் / மூடும் நேரம், வெள்ளிக்கிழமை ஜும்ஆ இடைவேளை, விடுமுறை நாள் குறிப்பிட்டுள்ளீர்களா?
  • Google Map pin சரியான இடத்தில் இருக்கிறதா?

✅ இன்றே செய்ய: உங்கள் Ummazo பக்கத்தைத் திறந்து, call, WhatsApp, Map மூன்றையும் நீங்களே அழுத்திச் சோதியுங்கள்.

இப்போதே செய்ய: 🕐 நேரம் / எண் / Map சரிபார்க்க

4 📖 பாடம்: 4 — பொருட்களைச் சேர்ப்பது
Lesson 4: Add Your Products

Products உள்ள பக்கங்களுக்கே அதிக views, அதிக call வரும்.

  • ஒவ்வொரு product-க்கும் தெளிவான படம், சரியான பெயர், விலை.
  • MRP-யையும் போட்டால் உங்கள் தள்ளுபடி தெரியும்.
  • அதிகம் விற்கும் 5 பொருட்களிலிருந்து தொடங்குங்கள்.
  • விலை மாறினால் உடனே மாற்றுங்கள்.

✅ இன்றே செய்ய: உங்கள் 5 முக்கியப் பொருட்களைப் படத்துடன் சேர்த்து, அதன் பிறகு வாரம் 5 புதிய பொருட்களைச் சேர்த்து வாருங்கள்.

இப்போதே செய்ய: 📦 Products சேர்க்க

📈 பகுதி-2 · Part-2 — வியாபாரம் பெருக

5 📖 பாடம்: 5 — சலுகை போடுவது
Lesson 5: Post an Offer

சலுகை உள்ள கடைகள் home page-இல் தனி block-இல் தெரியும். ஒரு நேரத்தில் ஒரு சலுகை, 15 நாட்களுக்கு.

❌ "Big Sale!"

✅ "₹500-க்கு மேல் வாங்கினால் 10% தள்ளுபடி — Ummazo வாடிக்கையாளர்களுக்கு மட்டும்"

  • சொன்ன சலுகையைக் கடையில் கண்டிப்பாகக் கொடுங்கள்.

✅ இன்றே செய்ய: உங்கள் முதல் சலுகையைப் போடுங்கள்.

இப்போதே செய்ய: 🏷 சலுகை போட

6 📖 பாடம்: 6 — உங்கள் link-ஐப் பகிருங்கள்
Lesson 6: Share Your Link

உங்கள் Ummazo பக்கம்தான் உங்கள் digital கடை. அதை எல்லோருக்கும் காட்டுங்கள்.

  • வாரம் ஒருமுறை WhatsApp status-இல் போடுங்கள்.
  • உங்கள் வாடிக்கையாளர் குழுக்களில் பகிருங்கள்.
  • கடையில் QR போஸ்டர் ஒட்டுங்கள். Bill-இலும் visiting card-இலும் link-ஐச் சேருங்கள்.

✅ இன்றே செய்ய: இன்றே WhatsApp status-இல் உங்கள் link-ஐப் போடுங்கள்.

இப்போதே செய்ய: 📲 என் பக்கத்தைப் பகிர

7 📖 பாடம்: 7 — மாத அறிக்கையைப் புரிந்துகொள்வது
Lesson 7: Read Your Monthly Report

மாதம் 1-ஆம் தேதி உங்களுக்கு views, call, WhatsApp எண்ணிக்கை வரும்.

  • Views அதிகம், call குறைவு என்றால்: படம், விலை, விவரம் சரியில்லை. பாடம் 1–4-ஐ மீண்டும் பாருங்கள்.
  • Views குறைவு என்றால்: link-ஐப் பகிருங்கள், products சேருங்கள், சலுகை போடுங்கள்.
  • Call அதிகம், வியாபாரம் குறைவு என்றால்: பதில் சொல்லும் முறையை மாற்றுங்கள் (பகுதி-3).

✅ இன்றே செய்ய: கடந்த மாத அறிக்கையைத் திறந்து, எந்த எண் குறைவாக உள்ளது என்று பாருங்கள்.

இப்போதே செய்ய: 📨 என் எண்ணிக்கைகள்

8 📖 பாடம்: 8 — மற்றவர்களை அழையுங்கள்
Lesson 8: Invite Others

Ummazo-வில் வாங்குபவர்கள் அதிகமானால், உங்களுக்கும் வாடிக்கையாளர்கள் அதிகம் வருவார்கள்.

  • உங்கள் வாடிக்கையாளர்களை "📲 ஒருவரை வாங்குபவராக அழைக்க" button மூலம் அழையுங்கள்.
  • அருகிலுள்ள நம் சகோதர வணிகர்களையும் இணையச் சொல்லுங்கள்.

✅ இன்றே செய்ய: 5 வாடிக்கையாளர்களுக்கும் 2 வணிகர்களுக்கும் அழைப்பு அனுப்புங்கள்.

இப்போதே செய்ய: 📲 ஒருவரை வாங்குபவராக அழைக்க

📞 பகுதி-3 · Part-3 — வாடிக்கையாளர் தொடர்பு கொண்டால்

9 📖 பாடம்: 9 — 5 நிமிடத்துக்குள் பதில்
Lesson 9: Reply Within 5 Minutes

Ummazo-வில் உங்களைப் பார்த்து WhatsApp செய்பவர், அதே நேரத்தில் இன்னும் 2–3 கடைகளுக்கும் செய்தி அனுப்பியிருப்பார். முதலில் பதில் சொல்பவருக்கே பெரும்பாலும் வியாபாரம் கிடைக்கும்.

உடனே பதில் சொல்ல முடியாவிட்டால், இதை அனுப்புங்கள்:

அஸ்ஸலாமு அலைக்கும். Ummazo வழியாகத் தொடர்பு கொண்டதற்கு நன்றி. 10 நிமிடத்தில் முழு விவரம் அனுப்புகிறேன்.

✅ இன்றே செய்ய: இந்தச் செய்தியை WhatsApp Business-இல் "Quick reply" ஆகச் சேமியுங்கள். நீங்கள் இல்லாத நேரத்தில் WhatsApp பார்க்கக் கடையில் ஒருவரை நியமியுங்கள்.

10 📖 பாடம்: 10 — Missed call-க்குப் பதில்
Lesson 10: Missed a Call? Message Back

Call எடுக்க முடியாமல் போவது இயல்புதான். ஆனால் திரும்ப அழைக்காமல் விட்டால், அந்த வாடிக்கையாளர் வேறு கடைக்குப் போய்விடுவார்.

  • Missed call பார்த்ததும் உடனே WhatsApp செய்யுங்கள்:

அஸ்ஸலாமு அலைக்கும். உங்கள் call-ஐ எடுக்க முடியவில்லை, மன்னிக்கவும். என்ன தேவை என்று சொல்லுங்கள், உடனே உதவுகிறேன்.

  • அல்லது 15 நிமிடத்துக்குள் திரும்ப அழையுங்கள்.
  • பிஸியான நேரத்தில் WhatsApp Business-இல் "Away message" வைத்திருங்கள்.

✅ இன்றே செய்ய: இன்றைய missed call-கள் அனைத்துக்கும் பதில் அனுப்புங்கள்.

11 📖 பாடம்: 11 — விலை, டெலிவரிக்குத் தெளிவான பதில்
Lesson 11: Answer Price & Delivery Clearly

"கடைக்கு வாங்க, பேசிக்கலாம்" என்ற பதில் வாடிக்கையாளரைத் தள்ளிவிடும். கேட்டதற்கு நேராகப் பதில் சொல்லுங்கள்.

  • விலை கேட்டால்: சரியான விலையைச் சொல்லுங்கள். தெரியாவிட்டால் "10 நிமிடத்தில் சொல்கிறேன்" என்று சொல்லி, சொன்னபடி சொல்லுங்கள்.
  • Delivery கேட்டால்: உண்டா இல்லையா, கட்டணம் எவ்வளவு, எப்போது வரும் என்று தெளிவாகச் சொல்லுங்கள்.
  • பொருள் இல்லை என்றால்: "இப்போது இல்லை, வெள்ளிக்கிழமை வரும்" என்று உண்மையைச் சொல்லுங்கள். அல்லது மாற்றுப் பொருளைப் பரிந்துரையுங்கள்.
  • பொருளின் படத்தை அனுப்பினால் வாடிக்கையாளர் வேகமாக முடிவெடுப்பார்.

✅ இன்றே செய்ய: உங்கள் delivery விதிகளை (பகுதி, கட்டணம், நேரம்) Quick reply ஆகச் சேமியுங்கள்.

12 📖 பாடம்: 12 — நன்றி சொல்லி, மீண்டும் அழையுங்கள்
Lesson 12: Say Thanks, Invite Back

ஒருமுறை வாங்கியவரை மீண்டும் வர வைப்பது, புதிய வாடிக்கையாளரைப் பிடிப்பதை விட எளிது.

  • வாங்கிய அன்றே நன்றி செய்தி அனுப்புங்கள்:

ஜஸாகல்லாஹு கைரன். உங்கள் வியாபாரத்துக்கு நன்றி. அடுத்த முறையும் எங்களை நினைவில் வையுங்கள்.

  • வாடிக்கையாளரின் எண்ணைச் சேமியுங்கள். புதிய பொருள் அல்லது சலுகை வந்தால் தெரியப்படுத்துங்கள், ஆனால் மாதம் 1–2 முறைக்கு மேல் வேண்டாம்.
  • அவர் நண்பர்களுக்கும் உங்கள் Ummazo link-ஐப் பகிரச் சொல்லுங்கள்.

✅ இன்றே செய்ய: இந்த வாரம் வாங்கிய 5 பேருக்கு நன்றி செய்தி அனுப்புங்கள்.

🤝 பகுதி-4 · Part-4 — நம்பிக்கையும் நேர்மையும்

13 📖 பாடம்: 13 — சொன்ன சொல்லைக் காப்பது
Lesson 13: Keep Your Word

நேர்மையான வியாபாரத்தை இஸ்லாம் மிகவும் உயர்வாகப் போற்றுகிறது. Ummazo-வில் உங்கள் கடையைப் பார்ப்பவர், நம் உம்மத்தின் மீதுள்ள நம்பிக்கையோடு வருகிறார்.

  • சொன்ன விலை: Ummazo-வில் போட்ட விலையைக் கடையிலும் கொடுங்கள். விலை மாறியிருந்தால் பக்கத்தை உடனே திருத்துங்கள்.
  • சரியான எடை, சரியான அளவு: குறைத்துக் கொடுப்பது பெரும் தவறு.
  • உண்மையான விவரம்: பொருளில் குறை இருந்தால் முன்பே சொல்லுங்கள். பழையதைப் புதியது என்று சொல்ல வேண்டாம்.
  • சொன்ன நேரம்: "இன்று மாலை delivery" என்றால் இன்று மாலையே. தாமதமானால் முன்பே தெரியப்படுத்துங்கள்.
  • சொன்ன சலுகை: போட்ட offer-ஐக் கடையில் மறுக்க வேண்டாம்.

✅ இன்றே செய்ய: உங்கள் Ummazo பக்கத்தில் உள்ள எல்லா விலைகளும் இன்றைய விலைதானா என்று சரிபாருங்கள்.

இப்போதே செய்ய: 📦 விலைகளைச் சரிபார்க்க

14 📖 பாடம்: 14 — புகாரை அமைதியாகக் கையாள்வது
Lesson 14: Handle Complaints Calmly

புகார் சொல்பவர் உங்களுக்கு இன்னொரு வாய்ப்பு தருகிறார். சொல்லாமல் போகிறவர் திரும்ப வருவதே இல்லை.

  • முதலில் முழுதாகக் கேளுங்கள். இடையில் மறுத்துப் பேச வேண்டாம், கோபப்பட வேண்டாம்.
  • தவறு உங்களுடையது என்றால் மன்னிப்புக் கேட்டு, உடனே சரிசெய்யுங்கள்: மாற்றிக் கொடுங்கள் அல்லது பணத்தைத் திருப்பிக் கொடுங்கள்.
  • உடனே முடிவு சொல்ல முடியாவிட்டால்:

உங்கள் சிரமத்துக்கு வருந்துகிறோம். இன்று மாலைக்குள் சரிசெய்து தெரியப்படுத்துகிறோம்.

  • சரிசெய்த பிறகு "இப்போது சரியா?" என்று ஒருமுறை கேளுங்கள்.
  • Ummazo-வுக்குப் புகார் வந்தால் admin உங்களைத் தொடர்பு கொள்வார். ஒத்துழையுங்கள், புகார் தொடர்ந்தால் listing நிறுத்தப்படலாம்.

✅ இன்றே செய்ய: புகார்களைக் கையாள கடையில் ஒருவரைப் பொறுப்பாளராக நியமியுங்கள்.