ℹ️ எங்களைப் பற்றி
🎯 எதற்காக உம்மஜோ?
உம்மஜோ, "உம்மத்துக்கான Zone", நம் சமூக வணிகர்களையும் வாங்குபவர்களையும் ஒரே இடத்தில் இணைக்கும் இலவசத் தளம்.
- 🏪 வணிகர்களுக்கு: உங்கள் கடைக்கு ஒரு digital பக்கம், புதிய வாடிக்கையாளர்கள், Seller Academy மூலம் இலவசப் பயிற்சி.
- 🛍 வாங்குபவர்களுக்கு: அருகிலுள்ள நம்பகமான வணிகங்கள், சலுகைகள், வேலை வாய்ப்புகள். நேரடியாக WhatsApp அல்லது call செய்யலாம்.
- 🕌 சமூகத்துக்கு: பள்ளிவாசல்கள், முக்கியத் தொடர்புகள், பயனுள்ள தகவல்கள், எல்லாம் ஒரே இடத்தில்.
மதுரையில் தொடங்கியுள்ளோம். போதுமான வணிகர்கள் இணையும் ஊர்களில் படிப்படியாகத் திறக்கிறோம் (ஊர்களைப் பார்க்க). எங்கள் கனவு: உலகளாவிய தமிழ் முஸ்லிம்களுக்கான ஒரு அடையாளம்.
👤 நாங்கள் யார்?
உம்மஜோவை மதுரையைச் சேர்ந்த சமூகப் பணியாளர் ஏ.கே. ஜமான் தொடங்கியுள்ளார். ஒவ்வொரு ஊரிலும் தன்னார்வ ஒருங்கிணைப்பாளர்களும், பதிவுகளைச் சரிபார்க்கும் குழுவும் உடன் பணியாற்றுகிறார்கள்.
✅ எங்கள் உறுதிமொழி
- இப்போது உம்மஜோவின் எல்லாச் சேவைகளும் இலவசம்.
- உம்மஜோ பெயரில் யாரும் பணம் வசூலிப்பதில்லை. யாராவது கேட்டால் உடனே எங்களிடம் தெரிவியுங்கள்.
- பள்ளிவாசல் நன்கொடை / சந்தா நேரடியாக அந்தப் பள்ளிவாசல் கணக்குக்கே செல்லும்.
- வட்டி சார்ந்த நிதியைப் பெறுவதில்லை. வட்டி நிறுவனங்களின் விளம்பரங்களையும் ஏற்பதில்லை.
- உம்மஜோ எந்த அரசியல் கட்சியையோ அமைப்பையோ சார்ந்தது அல்ல.
📞 தொடர்பு
WhatsApp மட்டும்: +91 90035 22687
தவறான தகவலைக் கண்டால், அந்தப் பக்கத்தில் "⚑ தவறைத் தெரிவி" அழுத்துங்கள்.
Admin · Ummazo