🎓 வெளிநாட்டில் இஸ்லாமியக் கல்வி — தமிழில் வழிகாட்டி
கடைசியாகச் சரிபார்த்த தேதி: 29 அக்டோபர் 2026 · தகவல்கள் அதிகாரப்பூர்வ வழிகாட்டியிலிருந்து. விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ தளத்தில் ஒருமுறை சரிபாருங்கள்.
🇸🇦 மதீனா இஸ்லாமியப் பல்கலைக்கழகம்
Islamic University of Madinah · சவூதி அரேபியா
🎂 வயது
17 முதல் 25 வயது வரை.
📜 கல்வித் தகுதி
பன்னிரண்டாம் வகுப்பு (மேல்நிலை) தேர்ச்சிச் சான்றிதழ் அல்லது அதற்குச் சமமானது. சான்றிதழ் கடந்த 5 ஆண்டுகளுக்குள் பெற்றதாக இருக்க வேண்டும். குறைந்தபட்ச மதிப்பெண் வழிகாட்டியில் குறிப்பிடப்படவில்லை.
✅ மற்ற நிபந்தனைகள்
- சவூதியில் வசிக்காதவராக இருக்க வேண்டும் (முழு உதவித்தொகைக்கு).
- நல்ல நடத்தை; வேறு பல்கலைக்கழகத்திலிருந்து ஒழுங்கு நடவடிக்கையால் நீக்கப்பட்டிருக்கக் கூடாது.
- சவூதியில் வேறு நிறுவனத்திடம் உதவித்தொகை பெற்றிருக்கக் கூடாது.
- உடல் தகுதி.
- உங்கள் நாட்டில் அங்கீகாரம் பெற்ற நிறுவனம் / அமைப்பு / அறிஞர் ஒருவரின் பரிந்துரைக் கடிதம்.
- பல்கலைக்கழகம் அறிவிக்கும் நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி.
🎁 உதவித்தொகை (முழு)
- கல்விக் கட்டணம் இல்லை.
- மாத உதவித்தொகை.
- வந்து சேரும்போது 2 மாத உதவித்தொகை; படிப்பு முடிக்கும்போது 3 மாத உதவித்தொகை; புத்தகங்களை அனுப்ப உதவித்தொகை.
- பல்கலைக்கழக விடுதி, மானிய விலையில் உணவு.
- ஆண்டுக்கு ஒருமுறை விமான டிக்கெட் சலுகை (வேறு யாரிடமும் டிக்கெட் பெறாவிட்டால்).
- மஸ்ஜிதுந் நபவிக்கு இலவசப் போக்குவரத்து.
- இலவச மருத்துவம்.
📚 படிப்புகள்
- ஷரீஆ (இஸ்லாமியச் சட்டம்)
- அகீதா & தஃவா
- குர்ஆன் & ஹதீஸ் (குர்ஆன் மனனம் + வாய்மொழித் தேர்வு தேவை)
- அரபு மொழி, மனிதவியல் / ஊடகம்
- சட்டம் & பொருளாதாரம் (வணிகம்)
- பொறியியல் (Electrical, Mechanical, Civil, Industrial, Chemical)
- கணினி (Computer Science, Data Science, IT)
- அறிவியல் (இயற்பியல், வேதியியல், கணிதம், Actuarial, சுற்றுச்சூழல்)
🗣 பாட மொழி
மார்க்கப் படிப்புகள் அரபியில்; அறிவியல் / பொறியியல் / கணினிப் படிப்புகள் ஆங்கிலத்தில் (IELTS / TOEFL போன்ற ஆங்கிலச் சான்றும் Qiyas தேர்வுகளும் தேவை). அரபு போதுமானதாக இல்லாதவர்கள் முதலில் அரபு மொழிப் பயிற்சி நிலையத்தில் படிக்கலாம்.
⏳ படிப்புக் காலம்
4 அல்லது 5 ஆண்டுகள் (படிப்பைப் பொறுத்து).
🖥 எப்படி விண்ணப்பிப்பது
சவூதி அரசின் "Study in Saudi" தளத்தில் online-ஆக. விண்ணப்பக் கட்டணம் பற்றி அதிகாரப்பூர்வ வழிகாட்டியில் எதுவும் இல்லை.
📅 விண்ணப்பக் காலம்
2026–27 (ஹிஜ்ரி 1448) தேதிகள் இன்னும் உறுதியாகவில்லை. அறிவிப்பு வந்ததும் இங்கே சேர்ப்போம்.
👩 மாணவிகள்
அதிகாரப்பூர்வ வழிகாட்டியில் மாணவிகளுக்கான தனி விவரம் இல்லை. உறுதியான தகவல் கிடைத்ததும் இங்கே சேர்ப்போம்.
🔗 அதிகாரப்பூர்வ link-கள்
❓ அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
மதீனா பல்கலைக்கழகத்தில் சேர வயது வரம்பு என்ன?
17 முதல் 25 வயது வரை. பன்னிரண்டாம் வகுப்புச் சான்றிதழ் கடந்த 5 ஆண்டுகளுக்குள் பெற்றதாக இருக்க வேண்டும்.
படிக்கக் கட்டணம் உண்டா?
முழு உதவித்தொகை பெறும் வெளிநாட்டு மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் இல்லை. மாத உதவித்தொகை, விடுதி, மருத்துவம், ஆண்டுக்கு ஒரு விமான டிக்கெட் சலுகை உண்டு.
அரபு தெரியாவிட்டால் விண்ணப்பிக்கலாமா?
ஆம். அரபு போதுமானதாக இல்லாதவர்கள் முதலில் பல்கலைக்கழகத்தின் அரபு மொழிப் பயிற்சி நிலையத்தில் படிக்கலாம். அறிவியல் / பொறியியல் / கணினிப் படிப்புகள் ஆங்கிலத்தில் நடக்கின்றன.
மார்க்கக் கல்வி மட்டும்தானா?
இல்லை. ஷரீஆ, அகீதா, குர்ஆன், ஹதீஸ், அரபு மட்டுமல்லாமல் பொறியியல், கணினி, அறிவியல், சட்டம் & பொருளாதாரம் படிப்புகளும் உள்ளன.
ஏஜெண்ட் மூலம் விண்ணப்பிக்க வேண்டுமா?
தேவையில்லை. Study in Saudi தளத்தில் நீங்களே online-ஆக விண்ணப்பிக்கலாம். "சீட் வாங்கித் தருகிறேன்" என்று பணம் கேட்பவர்களிடம் ஏமாற வேண்டாம்.
மற்ற பல்கலைக்கழகங்கள் (அல்-அஸ்ஹர், உம்முல் குரா, துருக்கி, மலேசியா…) விரைவில், இன்ஷா அல்லாஹ். தவறான தகவலைக் கண்டால் WhatsApp: +91 90035 22687.